திருவாரூர்.

கனரக லாரிகளுக்கு தகுதி சான்று புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது. டீசல் விற்பனையில் ஒரே விலை, டயர்கள் விற்பனையில் ஒரே விலை, லாரிகளுக்கு வாடகைக்கு ஒரே மாதிரியான நடைமுறை.

ஆனால் முன்பு 850 ரூபாய் இருந்த புதுப்பிப்பு கட்டணத்தை, தற்போது 28 ஆயிரத்து 200 ஆக உயர்த்தி மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள லாரி உரிமையாளர்களை மீட்டெடுக்கும் வகையில், புதிய கட்டணங்களை மாற்றி பழைய கட்டணங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 6000 லாரிகள் இன்று முதல் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ததஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஏறத்தாழ 30000 க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *