கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரீத்தி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடலில் எலும்பு முறிவு தொடர்பான சிகிச்சைகளில் பல்வேறு நவீன முறை அறுவை சிகிச்சைகள் அறிமுகப்படுத்தி உள்ளதாக மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் தண்டபாணி தெரிவித்துள்ளார்…

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரீத்தி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் எட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மருத்துவமனையின் இயக்குனரும், எலும்பு முறிவு மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தண்டபாணி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது எலும்பு முறிவு தொடர்பான சிகிச்சையில் இந்த ஆண்டு பல்வேறு விதமான நவீன சிகிச்சை முறையில் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் இடுப்பு எலும்பு முறிவுக்கு நவீன அறுவை சிகிச்சை முறையில் இணைக்கும் சாதனத்தைக் கொண்டு அறுவை செய்வதால் நோயாளிகள் விரைவாக குணமடைந்து, நடக்க முடியும் என தெரிவித்தார்.

மேலும் சிறிய எலும்பு முறிவுக்கு பெரும்பாலும் எண்ணைக்கட்டு மாவு கட்டு போன்ற முறைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளால், சில பின் விளைவுகள் ஏற்பட்டு எலும்புகள் இயங்குவதில் சிரமம் இருந்தது தற்போது இதற்கு நவீன முறையில் ஸ்க்ரூ மற்றும் பின்ஸ் மூலமாக சிறிய எலும்புகள் இணைக்கப்பட்டு சிகிச்சை செய்வதால் மணிக்கட்டு மற்றும் பாதங்கள் இயக்கம் விரைவாக நல்ல நிலையில் இயங்க முடிவதாக தெரிவித்தார்.. இதே போல சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு பெரும்பாலும் கால் பாதத்தில் புண்கள் ஏற்பட்டு எலும்புகள் சிதைந்து கால்களையே எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது ஆனால் தற்போது சர்க்கரை வியாதி புண்களை பிரஷர் நீக்கும் காலனி மற்றும் நவீன மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்ததால் கால் புண்கள் குணமாக இருப்பதாகவும் இதனால் கால்களை அகற்றும் தேவை ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *