நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் பல்வேறு விதமான கொண்டாட்டம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள கிருபாலயம் மன வளர்ச்சி குன்றிய காப்பக பள்ளியில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தொண்டரணி தலைவர் தளபதி தினேஷ் தலைமையில்,
ஒன்றிய தொண்டரணி செயலாளர் இளவழகன் முன்னிலையில்

திரைப்படம் வெற்றி பெற வேண்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் வாட்டர் டேங்க், மின்விசிறி, குடம் மற்றும் சமையல் உபகரண பொருட்கள் ஆகியவற்றை வழங்கினர். மேலும் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் வகையில் அங்குள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இனிப்புகளை கொடுத்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தளபதி சுமன்,மாவட்ட துணை தலைவர் திலிப்,மாவட்ட இணை தலைவர் நண்பன் அரவிந்த்,
செம்பை ஒன்றிய பொருளாளர் மதன்,துணை செயலாளர் அறிவழகன், பேரூர் தொண்டரணி நிர்வாகி குணா, விஷ்வா மற்றும் மயிலை நகர தொண்டரணி தலைவர் கீர்த்துவாசன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *