பெங்களூரில் 5வது இந்திய சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டி மே 4 ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியை சர்வதேச பாரா தடகள பெடரேஷன் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி நடத்தியது.

இப்போட்டி யில் நேபாளம், பூட்டான், ஸ்ரீலங்கா, இந்தியா, மொரிஷியஸ், கசகஸ்தான், பங்களாதேஷ் பிலிப்பைன்ஸ், மற்றும் பல நாடுகள் பங்கேற்றனர் இந்தியாவிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட வர்கள் 100 மீட்டர் 200 மீட்டர் 400 மீட்டர், 800 மீட்டர் 1500 மீட்டர் உயரம் தாண்டுதல் நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் ஊனத்தின் அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக வீரர்கள் மனோஜ் குமார், முத்துராஜா கிரண்ஆகியோர் தங்கப்பதக்கமும், மனோஜ் பாலாஜி வினோத்குமார், வெங்கடேசன் ,ரூபா, மாரியப்பன் ஷேக் அப்துல் காதர் ஆகியோர் வெள்ளி பதக்கமும், வினோத் குமார் ,கஜன் கெளதம் ,அமுல்யா ஈஸ்வரி ,மணிகண்டன் ரமேஷ் முத்துமீனா நளினி ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர்.

மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த முத்துராஜ் மற்றும் மனோஜ் குமார் ,சென்னை சேர்ந்த மனோஜ், சேலத்தை சேர்ந்த பாலாஜி, சென்னை சேர்ந்த சேக் அப்துல் காதர், மதுரையைச் சேர்ந்த மனோஜ் ஆகியோர் சீனாவில் நடைபெறும் ஏசியன் பாரா கேம்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பதக்கம் பெற்றவர்களை இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தீபா மாலிக், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் தமிழக வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவப்படுத்தினர்

தமிழக வீரர்களுக்கு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருபாகரராஜா அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார் தமிழக பாரா தடகள அணிக்கு பயிற்சியாளராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் ரஞ்சித் குமாரும் அணி மேலாளர் விஜயசாரதியும் விளையாட்டு வீரர்களுடன் சென்றிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *