C K RAJAN
Cuddalore District Reporter
9488471235…
கடலூர் மாவட்டம் நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்
தகவல்
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத நெகிழிப் பொருள்கள் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பொட்டலங்கள் செய்யவும் பயன்படுத்தாமல் இருக்கும் உணவகங்களுக்கு தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறையால்
ரூ.1 இலட்சம் ரொக்கத்துடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கத்துடன் கூடிய விருதும் வழங்கப்படுகிறது.
ஆர்வமுள்ள வணிகர்கள் வரும் நவம்பர் 25ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போரின் உணவகங்கள் பதிவு, உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒவ்வொரு உணவகத்திலும் ஒருவர் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவச் சான்றிதழ்கள் (12 மாதங்களுக்குள் பெற்றவை) கட்டாயம் பெற்றிருக்க வேண்டும், மற்றும் மூன்றாம் தரப்பு ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கியதில் குறைந்தபட்சம் 110-க்கு 90 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும், சுய அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான குழுவினரால் பரிசீலனை செய்து கள ஆய்வுக்குப் பிறகு சென்னை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும். விண்ணப்பத்தை நிறைவு செய்து மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பத்தை பிடிஎப் வடிவில் dofssavsplastic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது பென்ட் ரைவ் மூலமாகவோ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட நியமன அலுவலர் அலுவலகம், உணவு பாதுகாப்புத் துறை, இரண்டாம் தளம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரியிலும், 04142-221081 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தெரிவித்துள்ளார்.