வலங்கைமான் அருகே உள்ள ஆவூரில் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ” தலைப்பில் தேர்தல் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூரில் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” தலைப்பில் தேர்தல் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்,
மாவட்ட பிரதிநிதி கல்யாணசுந்தரம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பரமசிவம், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன் கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் வலங்கைமான் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 45 வாக்குச்சாவடி முகவர்கள், BDa மற்றும் பல்வேறு அமைப்பினைச் சார்ந்த திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.