செங்கல்பட்டு
அகில இந்திய காங்கிரஸ்
பொதுக்குழு உறுப்பினராக ஆர்.கிருஷ்ணதாஸ்
நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் சோனியா காந்தி கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் ஆணைக்கிணங்க காங்கிரஸ் கட்சி தமிழக மாநில செயல் தலைவர் ஆரணி மக்களவை உறுப்பினர் விஷ்ணு பிரசாந்தின் பரிந்துரையின் படி செங்கல்பட்டு மாவட்டம்
ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த ர.கிருஷ்ணதாஸ்
வயது (55) தந்தை ரங்கநாதன்
என்பவர் அகில இந்திய காங்கிரஸ் பொது குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களது வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.