கோவை
ஐஐஐடி கோயம்புத்தூர் மையத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்..
இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்டீரியர் டிசைனர்ஸ் (ஐஐஐடி) கோயம்புத்தூர் மையத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா கோவை ரேடிஸன் புளூ ஓட்டலில் நடைபெற்றது.ஐஐஐடி தேசிய தலைவர் ஜிக்னேஷ் மோடி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஆஷிஷ் ரைச்சுரா புதிய தலைவராக பதவியேற்றார். முன்னாள் தலைவர் ஸ்ரீநீ ரைச்சுரா தனது பதவிக்கால சாதனைகளை விளக்கும் வீடியோவை வெளியிட்டு உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கட்டிடக் கலை நிபுணர் சரண்ஜித் சிங் ஷா, “இடம், மக்கள், நோக்கம்” என்ற மூன்று கூறுகளை அடிப்படையாகக் கொண்டு கட்டிட வடிவமைப்பு செய்ய வேண்டியது முக்கியம் என கூறினார்.
புதிய நிர்வாகிகளான தலைவர் ஆஷிஷ் ரைச்சுரா, துணைத் தலைவர் நிர்மல் குமார்,அடுத்த தலைவர் கே. ராஜகோபாலன், செயலாளர் ஏ. நாகப்பன், பொருளாளர் சாதிஷ் மூசா ஆகியோர் ஆவர்.