வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல்லில் அரசு மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் சார்பில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதற்கு மாநில பொதுச்செயலாளர் மருத்துவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மருத்துவர் நாகராஜ், பொருளாளர் மருத்துவர் திருலோகசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிதாக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டால் அதற்குரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். பழைய மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், பணியாளர்கள் புதிய மருத்துவமனைகளில் பணி செய்ய நிர்பந்த படுத்தக்கூடாது. தமிழ்நாடு முழுவதும் 24 ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் சுமார் 12,000 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிறார்கள்.
மருத்துவர் பற்றாக் குறையால் நோயாளிகளும் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.