தமிழ்நாடுஅரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்சங்க சார்பில் மாநிலம் தழுவிய வட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம் வலங்கைமான் ஊராட்சிஒன்றிய அலுவலக வளாகம் அருகில் நடைபெற்றது தலைவர் மற்றும் மாநிலசெயற்குழு உறுப்பினர் S.புஷ்பநாதன் தலைமையேற்று நடத்தினார்
வட்டாரவளர்ச்சி அலுவலர் N.சண்முகம் வரவேற்று பேசினார் தலைமைஆசிரியர் சிவ.செல்லையன் தெய்வ.பாஸ்கரன் அங்கன்வாடி ஊழியர்சங்க மாவட்டசெயலாளர் பிரேமா,சித்ரா மருந்தளுனர்சங்க V.சாம்பசிவம் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத்தலைவர் S.மகேஷ் ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க N.பிரபு, P.சிங்காரவேலு, G.ரமேஷ், தமிழ்நாடு அரசுஊழியர்சங்க வட்டதலைவர் V.நடராஜன் பொதுப்பணித்துறை S.சுவாமிநாதன் வேளாண்மைத்துறை
T.அமிர்தகணேசன், மகாலிங்கம் ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் V.மனோகரி கூட்டுறவுத்துறை முத்துரெங்கன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்
தமிழக முதலமைச்சரின் தேர்தல்கால வாக்குறுதிகளை புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் 70வயதான ஓய்வூதியர்களுக்கு 10%கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும் ஓய்வுபெற்ற சத்துணவு அங்கன்வாடி வருவாய்கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்புஊதியம் பெற்று ஓய்வூதியம்ரூ.2000-பெற்றுவரும் அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7850- வழங்க வேண்டும் 21மாத காலமாக விட்டுவிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடன் வழங்கவேண்டும் புதியமருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை தீர்வு செய்து நிலுவையில் உள்ள பட்டியல்களை உடன் வழங்கவேண்டும்
அனைவருக்கும் வாரிசுகளுடன் கூடிய புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை வழங்க வேண்டும் ஓய்வூதியர் தனது ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை மொத்தமாக பெறுதல் கம்யூட்டேஷன் தொகையினை திரும்பசெலுத்தும் காலத்தினை 15ஆண்டுகளில் இருந்து 11ஆண்டுகளாக குறைக்க வேண்டும் மத்தியஅரசு 3%அகவிலைப்படி வழங்கியதை பல மாநில அரசுகளும் வழங்கிவிட்ட சூழலில் தமிழக அரசுமேலும் காலம்தாழ்த்தாமல் உடனே 3%அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 23.12.2025அன்று சென்னை கருவூல கணக்குத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு மாபெறும் தர்ணா போராட்டம் நடைபெறும் எனவும் விரிவாக பேசி முடிவு செய்யப்பட்டது
அன்றைய தினமே வேலிடேஷன் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி மேதகு ஆழுனர் மூலமாக மாண்புமிகு பிரதமமந்திரிக்கு முறையீடு அளிக்கவும் உள்ளது இறுதியாக வட்ட செயலாளர் A.சண்முகம் நன்றி கூறினார்