திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்டக் கிளை சார்பில் 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு வட்டத் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளர் பாலராஜு, தலைவர் மாணிக்க வரதன், மாவட்ட இணைச்செயலாளர் இப்ராஹிம், வட்டார செயலாளர் சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.