கோவை
கே.பி.ஆர் கலைக் கல்லூரியில் தேசிய அளவிலானவினாடி வினாப்போட்டி
கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் தேசிய அளவில பள்ளி மாணவர்களுக்கான வினாடிவினாப் போட்டி கேள்விக்களம்-2025 நடைபெற்றது.
இந்நிகழ்வில் கேபிஆர் கலைக் கல்லூரியின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் தலைமையுரை ஆற்றினார். பள்ளி மாணவர்கள் தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்வது, எதிர்காலப் போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்க உதவியாக இருக்கும் என்று கூறினார்.
இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் முனைவர் கீதா வாழ்த்துரைவழங்கி, பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் அறிவு சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்பதை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.இப்போட்டியில், வினாடி வினா நிபுணர் முனைவர் ரங்கராஜன் நடுவராகப் பங்கேற்றுப் போட்டியைத் திறம்பட வழிநடத்தினார்.
கோவை பிஎஸ்பிபி மில்லியனம் பள்ளி ரூ15,000 முதல் பரிசையும்,ரூ.10,000 இரண்டாம் பரிசையும் வென்றது. சின்மயா சர்வதேச உறைவிடப் பள்ளி ரூ.6000 மூன்றாம் பரிசையும் வென்றது.கல்லூரி நிர்வாகத்தின் சார்பில், போட்டியில் வெற்றி பெற்ற 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அடுத்த கல்வியாண்டில் கேபிஆர் கலைக் கல்லூரியில் பயில்வதற்குண்டான சலுகைகள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.இந்நிகழ்வில், 55 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 51 பள்ளிகளைச் சேர்ந்த 932 மாணவ, மாணவிகள் 466 குழுக்களாகப் பங்கேற்றுச்சிறப்பித்தனர்.