C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு
ரூ.21,000 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 672 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடைபெற்ற குறைதீர்வு முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தலா ரூ.7,200 வீதம் மொத்தம் ரூ.21,600 மதிப்பீட்டிலான சிறப்பு நாற்காலிகள் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தங்கமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.