நவ.13.பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக க.கண்ணன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். விருதுநகர் மாவட்டத்தில் முதன் முதலாக வருவாய் துறையில் தட்டச்சராக தனது பணியை தொடங்கியவர். 1994 முதல் 2023 வரை தட்டச்சர் முதல் வட்டாட்சியர் வரை விருதுநகர் மாவட்டத்திலேயே பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து ஜூலை 2023ம் ஆண்டு வருவாய் துறையில் துணை ஆட்சியரக பதவி உயர்வு பெற்று,
மதுரை மாவட்டத்தில் தனித்துணை ஆட்சியராக பணிபுரிந்துள்ளார்.
செப்டம்பர் 2024ம் ஆண்டு திருமங்கலம் கோட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியராகவும், ஜனவரி 2025ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று சென்னை எழுதுபொருள் அச்சுத்துறையில் இணை இயக்குநர் / மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றி, தற்போது பெரம்பலூர் மாவட்டத்தின் 29வது மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுள்ளார்.
புதிய மாவட்ட வருவாய் அலுவலரை வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்