ஐப்பசிமாத பொங்கல்விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இரவு கண்ணார் பட்டியில் இருந்து கமுதி நாராயணபுரம் கல்லுப்பட்டிக்கு ஸ்ரீ முத்தாலம்மன் சிலையைவான வேடிக்கைகள் அதிர சம்பளக்கா வாத்தியத்துடன் 1008 தீ பந்தங்களுடன் பொதுமக்கள் ஊர்வலமாக கொண்டுசென்றனர்
அதிகாலை நான்கு மணி அளவில் கல்லுப்பட்டி ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவிலில் கொண்டுவரப்பட்டு கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தங்கள் நேத்தி கடனை செலுத்தினர்.
காலை 7 மணி அளவில் அம்மனுக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சியானது நடைபெற்றது ஏராளமான கிராம பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர் . பின்னர் மாலை அம்மன் சிலையானது அழிக்கப்பட்டது.இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா அடுத்து 2027 ஆம் ஆண்டு ஐப்பதி ஐப்பசி மாதம் மீண்டும் நடைபெறும்