சுகாதாரத் துறை இணைய இயக்குனர் மாரிமுத்து அவர்களின் ஆய்வின்போது போலி மருத்துவர் கண்டுபிடிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது
பெரம்பலூர்.நவ.13. பெரம்பலூர் மாவட்டம், பென்னக்கோணத்தில் கதிர்வேல் (33) என்பவர் தனது வீட்டின் அருகே அரசு அனுமதியின்றி போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு வந்த புகாரின் அடிப்படையில், இணை இயக்குனர் மரு.மாரிமுத்து அவர்கள் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது கதிர்வேல் என்ற நபர் KK மெடிக்கல் என்ற பெயரில் நடத்தி வந்த மருந்தகத்தையும் அருகில் இருந்த அவரது வீட்டையு ஆய்வு செய்ததில் கதிர்வேல் போலியாக மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மங்களமேடு காவல் நிலையத்தில் இணை இயக்குநர் அளித்த புகாரின்பேரில் கதிர்வேல் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.