கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நூலக வார விழா மற்றும் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் படத்திறப்பு, குழந்தைகள் தின விழா வாழ்த்து அரங்கம் வாசகர் வட்ட தலைவர் கவிஞர் சிங்காரம் தலைமையில் நடைபெற்றது,

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வட்ட இணைச் செயலாளர் கவிஞர் திருமதி கலைச்செல்வி வரவேற்றார், நிகழ்ச்சியில் முன்னாள் பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் திருஉருவப்படத்தை ஓய்வு பெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர் கவிஞர் நல்லதம்பி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்,

நிகழ்ச்சியில் வாசகர் வட்ட ஆலோசகர் மரு. கேசவன், திருக்குறள் திருப்பணித்திட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் நடராஜன்,நூலக வாசகர் வட்ட கௌரவத் தலைவர் லயன் இளங்கோவன், வாசகர் வட்ட துணை தலைவர் சத்யராஜ்மோகன், முத்தமிழ் சங்க தலைவர் பாட்டருவி கவிஞர். காரை.பழ. ஆறுமுகம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கவிஞர் ஜெகரட்சகன், கடலூர் மாவட்ட குடும்ப நல செயலாக அலுவலக கண்காணிப்பாளர் வீரவேல், ஞானசேகரன், பாலசுப்ரமணியன் தமிழ் சங்க பொருளாளர் கவிஞர் குறிஞ்சி இரவி,செந்தமிழ் பேரவை மாவட்ட தலைவர் சுந்தர்ராஜா,ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் ஜெயபால், பார்த்திபன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *