கடலூரில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில்,கடலூர் மாவட்டத்தில்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும், எனவும் கடலூர் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார்ஆலோசனை வழங்கினார்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள். கோடீஸ்வரன், ரகுபதி மற்றும் நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம். திட்டக்குடி உள்ளிட்ட உட்கோட்ட துணை காவல்கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
கலந்தாய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த அக்டோபர்மாதம் மிக சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்,சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 106 காவல்துறையினருக்கு
சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இதில் வடலூர் உதயகுமார், உதவி ஆய்வாளர்கள் வடலூர் பரந்தாமன், ஆகியோருக்கும், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.