அலங்காநல்லூர்.நவ.16.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசியல் அங்கீகாரம் பெற்றதற்கும் மணி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது மொத்தம் 17 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது .இதனை வீரர்கள் காளைகளை அடக்கி வெற்றி பெற்றனர். இதில் கல்லணை மணி பிரதர்ஸ், சத்திரப்பட்டி மருதுபாண்டியன் குழுவினர் வெற்றி பெற்று ரூ 10000 மற்றும் கேடயம் பரிசாக பெற்றனர்.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை வளவன் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் முகாம் செயலாளர் பிரவீன் குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வடமாடு மஞ்சுவிரட்டை கண்டுரசித்தனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை
பெரியஇலத்தைக்குளம்விடுதலை சிறுத்தைகள் முகாம் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை அலங்காநல்லூர் போலீசார் செய்திருந்தனர்.