எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட கோவில்பத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது…
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உயர் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து அதன்படி கடந்த 2.8.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு,தொடர்ந்து ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைகளில் இம்முகாம் நடைபெறுகிறது.
இதுவரை 14 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு,இன்று 15 வது மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.இது போன்ற முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒரே இடத்தில் பொது மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை மருத்துவம்,இருதய மருத்துவம்,எலும்பியல் மருத்துவம்,நரம்பியல் மருத்துவம்,தோல் மருத்துவம்,
காது.மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம்,மகப்பேறு மருத்துவம், இயன்முறை மருத்துவம்.பல் மருத்துவம், கண் மருத்துவம்,மன நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம்,நுரையீரல் மருத்துவம் ஆகிய மருத்துவ சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகறிது. அதுமட்டுமில்லாமல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, தூய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்றவைகள் பெறுவதற்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்படுகிறது.. இம்முகாம்களில் இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்து பயனாளிகளுக்கும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முழுமையான இரத்த அணுக்களின் எண்ணிக்கை,இரத்த சர்க்கரை அளவு,சிறுநீரக செயல்பாட்டு சோதனைகள் செய்யப்படுகிறது.
மேலும் ஈ.சி.ஜி,எக்கோ, எக்ஸ்ரே,ஸ்கேன் காசநோய் மற்றும் தொழுநோய் பரிசோதனைகள், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.
இப்பகுதி மக்கள் இம்முகாமிற்கு வருகை தந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக்கொள்ள வேண்டும்.முகாம் நடைபெறுவதற்கு முன்பாகவே அப்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் முறையாக இம்முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து மருத்துவம் 10 கர்ப்பினி தாய்மார்களுக்கு தலா ரூ.2000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 நபருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான அடையாள அட்டைகளும், 10 பயனாளிகளுக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு சான்றிதழ்களையும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, சுகாதார துறை இணை இயக்குநர் பானுமதி, துணை இயக்குநர் அஜீத் பிரபுகுமார்,நகர்மன்ற துணைத்தலைவர் சுப்புராயன்,நகர்மன்ற உறுப்பினர்கள் திரு.பாஸ்கரன்,திரு.தேவதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.