குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழிஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது, விழாவின் சிறப்பு விருந்தினராக வடலூர் டி.ஆர்.எம்.பர்னிச்சர்ஸ் உரிமையாளர் டி.ராஜ மாரியப்பன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணிஜோசப் வரவேற்றார்.விழாவில் ஆசிரியர் பயிற்றுநர் சரோஜினி,பள்ளி ஆசிரியர்களான சாந்தி, மேரிபுஷ்பலதா,லயோனா,கீதாமஞ்சித்மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்,விழாவை யொட்டி,மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது,கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் டி.ராஜமாரியப்பன், நினைவு
பரிசுகளை வழங்கினார்.