திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மிட் பிரைன் மனநல மையம் மற்றும் மலர் கிளினிக் லேப் இணைந்து முதியோர்களுக்கான உடல் நலனும் மன நலமும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை பிருதூர் புனித வளனார் முதியோர் காப்பகத்தில் நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு ரெக்சிலின் மைக்கேல் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர்கள் மலர் சாதிக், சு.தனசேகரன், பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனோஜ் குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்தன் பங்கேற்று, மருத்துவ முகாமை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் மனநலம் சார்ந்த குறிப்புகளை மன நல நிபுணர் டாக்டர் இரா.பாஸ்கரன் முதியோர்களுக்கு வழங்கினார். உடற்பயிற்சி மற்றும் எலும்பு சார்ந்த பாதுகாப்பினை டாக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார். இயன் முறை குறிப்புகளை வழூர் அரசு மருத்துவர் வினோத் குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட முதியோர்கள் பங்கு பெற்று பயனடைந்தார்கள். இறுதியில் பிலோமினா மங்கலம் நன்றியுரை கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *