கடலூர், மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள எஸ்,டி.ஈடன்மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா பள்ளி வளாகத்தில், முதல்வர்,டாக்டர் சுகிர்தா தாமஸ், தலைமையில் தாளாளர் தீபக்தாமஸ், இணை இயக்குநர் பவித்ராதீபக் மற்றும் தலைமையாசிரியை சாந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. குழந்தைகள் தினவிழாவையொட்டி அறிவியல் கண்காட்சியும், உணவு திருவிழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்களின் படைப்புகள் ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்திருந்தன. மேலும் குழந்தைகள் தினத்திற்கான பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற, மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும்,நடைபெற்றது.இறுதியாக நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.