கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காருண்யா சமூக மையத்தின் சார்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு காருண்யா சமூக மையத்தின் இயக்குனர் சிஜி ஜோஸ் தலைமையில் காருண்யா மையத்தில் பங்கு தந்தை ஜோசப் புத்தூர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்
முன்னதாக இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தியும் வகையில் மாணவர்கள் மற்றும் அனைவரும் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இப்பேரணியை தூய இருதய ஆலய பங்குதந்தை ஜெகன் ஆண்டனி தொடங்கிவைத்தார்
அதைத்தொடர்ந்து மாணவர்கள் நேர்மையாக வாழ்ந்து முன்னேறுவது குறித்தும் வாழ்வில் தேவையான பண்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்
இந்தியன் வங்கி மேலாளர் ஜெபசேகர், உபாசி முன்னாள் மேலாளர் பால் தேவநேசன், சகோதரி ரொஜினா, சகோதரி ரோஸ்லிமா, சகோதரி வினயா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்