சொரத்தூரில் நடைபெற்ற விழாவில் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 3.55 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளை அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சொரத்தூரில் 13-11-2025 அன்று தமிழ் நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊள்ளாட்சித்துறை மூலம் ரூபாய் 3. 55 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள மூன்று பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட 8 பணிகளை திறந்து வைத்தும் சிறப்புரையாற்றினார்.
துறையூர் ஊராட்சி ஒன்றியம் குன்னுப்பட்டி ஊராட்சியில் உள்ள கீழ குன்னுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூபாய் 8. 44 லட்சம் மதிப்பீட்டில் புதிய வைப்பறையுடன் கூடிய சமையல் அறை கூடம், ரூபாய் 224. 22 லட்சம் மதிப்பீட்டில் நரசிங்கபுரம் முதல் து.ரங்கநாதபுரம் வரை சாலை பலப்படுத்துதல், கலிங்கமுடையான் பட்டி ஊராட்சியில் ரூபாய் 2. 56 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சாலை ஓரமாக 300 மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட மூன்று பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,துறையூர் நகராட்சி ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளி,சிக்கத்தம்பூர் ஊராட்சியில் உள்ள ஒட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி,கண்ணனூர் பாளையம் ஊராட்சியில் உள்ள அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கிளியனூர் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,கலிங்கமுடையான் பட்டி ஊராட்சியில் உள்ள மெய்யம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் தலா ரூபாய் 7. 56 லட்சம் மதிப்பீட்டில் புதிய வைப்பறையுடன் கூடிய சமையலறை கூடங்கள் ,சொரத்தூரில் ரூபாய் 13. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம்,வெங்கடேசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூபாய் 34. 60 லட்சம் மதிப்பீட்டில் இரு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம்,மருவத்தூர் ஊராட்சியில் உள்ள அம்மம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூபாய் 34. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரு வகுப்பறை கட்டிடம் ஆகிய எட்டு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் சிறப்புரையாற்றினார்.