மதுரை மாவட்டம் விரகனூர் கோழிமேடு பகுதியில் உள்ள கே.எல்.என் பள்ளியில் பிரிஸ்ட் சட்டபள்ளி சார்பில் அதன் கல்வி தலைவர் டாக்டர் எம்.ஜாஜி தலைமையில் பள்ளி மாணவர்களுக்கான போக்சோ சட்டம், மனித உரிமை, குழந்தைகள் உரிமை, சிறார்களுக்கான சட்டம், சைபர் குற்றம், பாகுபாடு எதிர்ப்பு,
சுற்றுச்சூழல் சட்டம், தொழில் தொலை நோக்கு நிலை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பள்ளி மாணக்கர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வழக்கறிஞர் உம்மு அபிஸா கலந்துகொண்டு மாணக்கர்களுக்கான போக்சோ சட்டம், சிறார் சட்டம் ஆகிய பல்வேறு சட்டங்களை குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்.
மேலும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, சிறார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் போக்சோ சட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்து பேசினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.