இருசக்கர வாகனத்தில் தஞ்சம் அடைந்த நல்ல பாம்பை தீயணைப்பு மீட்பு வீரர்கள் லாவகமாக பிடித்து சென்றனர்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நல்ல பாம்பு வந்ததால் பீதி அடைந்த பொதுமக்கள் திருவொற்றியூர் பாலகிருஷ்ணா காலனி மூன்றாவது தெரு வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துள்ளார்.
நேற்று இரவு வண்டியில் சுமார் ஐந்து அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று உள்ளே புகுந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பார்த்து பின்னர் மனோகர் என்பவர் திருவொற்றியூர் தீயணைப்பு துறை தகவல் கொடுத்தனர். திருவெற்றியூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பை உபகரணங்கள் உதவியுடன் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிடித்து அடர்ந்த காட்டில் கொண்டு விட்டனர்.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர் இந்த பகுதியில் அடிக்கடி பாம்புகள் வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் செடி கொடிகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.