கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் பூத் கமிட்டிகளுடன் எஸ்.ஐ.ஆர்.என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து உரிய ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி உத்தரவிற்கிணங்க வால்பாறை அருகே உள்ள முடீஸ் பஜார் பகுதியில் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் நகரச்செயலாளர் ம.மயில்கணேசன் முன்னிலையில் நடைபெற்றது
முன்னதாக தொழிலாளர்களின் 475 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் பணிச்சுமை குறைப்பிற்கும் நான்கு சிலாப்பை இரண்டு சிலாப்பாக குறைத்ததற்கும் தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சியோடு சிறப்பு வரவேற்பு அளித்தனர் அதைத்தொடர்ந்து பூத் கமிட்டிகளுக்கான உரிய ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளரும் வால்பாறை சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமானராஜ்குமார், ஐடி விங்க் பெதப்பம்பட்டி ராஜசேகர்,ஐடி விங்க் இணைச்செயலாளர் திருப்பூர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி சரிபார்ப்பு ஆகியவற்றை உரியமுறையில் கவனமுடன் சரிபார்க்க வேண்டும் என்றும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பொதுச்செயலாளர் எடப்பாடி யாரின் தலைமையிலான நல்லாட்சி ஆட்சி அமைய அதிமுகவின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி அனைவரும் ஒன்றுபட்டு அதற்க்கான தேர்தல் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் பாசறை மாவட்ட இணைச்செயலாளர் சலாவுதீன் அமீது, வழக்கறிஞர் மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.ஆர்.பெருமாள், பேரவை மாவட்ட இணைச் செயலாளர் நரசப்பன், வர்த்தக அணி மாவட்ட இணைச்செயலாளர் ஜெபராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் டி.எல்.சிங், வசந்த், நகர அவைத்தலைவர் சுடர் பாலு,நகர துணைச் செயலாளர் எஸ்.பி.பொன்கணேசன், ஐடி விங்க் சண்முகம், சண்முகவேல், முத்து முடி கலைவாணன், பாலன்,ஜீவா, எம்.ஆர்.எஸ்.மோகன் லோகேஷ் வரன் மற்றும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
இதே போல வால்பாறை நகரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நகரச்செயலாளர் மயில் கணேசன் தலைமையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வீ.அமீது முன்னிலையில் நிர்வாகிகளுடன் எஸ்.ஐ.ஆர்.என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை நேரடி பார்வையின் மூலம் துரிதப்படுத்தி வருகின்றனர்