தஞ்சாவூர் பிரிஸ்ட் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில்14 வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவினை பல்கலைக்கழக வேந்தர் பொன்னையா நாகேஸ்வரன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு மாநில வரித்துறை கூடுதல் ஆணையர் தேவேந்திர பூபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 31 முனைவர் பட்டமும், 215 முதுகலை பட்டமும், 888 இளங்கலை பட்டமும் மொத்தம் 1134 பட்டங்களை வழங்கி, முன்னதாக மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவில் அவர் பேசும் போது.

மாவீரன் அலெக்சாண்டர் தனது இளம் வயதில் ஏழ்மையில் இருந்ததாகவும், அவன் பள்ளி படிப்பை தொடரும்போது மற்ற மாணவர்கள் போல் இயல்பான விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் நேரத்தை செலவிடாமல் அவன் படிப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். அவன் தங்கி படித்த பள்ளியில் மாணவர்கள் விளையாடும் நேரத்தில் அவர்களுக்கு மோர் கொடுப்பதற்காக ஒரு பெண்மணி அங்கு வருவது வழக்கம் அந்தப் பெண்மணி இடம் வானவர்கள் விடுதியில் ஒருவன் இருப்பான் அவனிடம் கொடுத்து விட்டு செல்லுமாறு கூறுவார்கள் அந்த பெண்மணியும் அங்கு சப்தம் செய்யும்போது ஒரு மாணவன் அங்கு இருக்கும் கலயங்களில் மோர் ஊற்றுமாறு குரல் எழுப்புவான் இது வழக்கமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு நாள் அந்த பெண்மணிக்கு சந்தேகம் வந்து அந்த மாணவனை நேரில் கண்டு மற்ற மாணவர்கள் விளையாடும் போது நீ மட்டும் அறையில் பதுங்கி இருக்கிறாயே, நீ என்ன கோசாவா என்று கேள்வி எழுப்பினார்

அதற்கு நெப்போலியன் சிரித்துக் கொண்டே அமைதியாக சென்றுவிட்டார் பின்னாளில் மாமன்னனாக அவனைக் கண்டு உலகமே அஞ்சும் வேளையில் ஒரு நாள் அவனுக்கு ஒரு ஆசை வந்தது தான் படித்த காலத்தில் உள்ள நண்பர்களை பழகியவர்களை பார்க்க வேண்டும் என்று தனக்கு கீழ் உள்ள அதிகாரியிடம் அதை கூறும் போது அவர்கள் அந்த ஊருக்குச் சென்று அதற்குரிய ஏற்பாடுகளை செய்தனர்

அந்த ஊரே பரபரப்பாக இருந்தது அவன் கூறினான் எனக்கு சின்ன வயதில் மோர் கொடுத்த பெண்மணி அழைத்து வாருங்கள் நேரில் பார்க்க வேண்டும் என அந்தப் பெண் மணியோ பயத்தில் நடுங்கி எசமா நான் உங்களை பற்றி எதுவும் தப்பா பேசல என்று பயத்தின் உச்சத்தில் அவரின் கால்களில் விழுந்தார்

அப்போதும் மாவீரன் நெப்போலியன் என்னை ஞாபகம் இல்லையா உனக்கு என கேட்டான் உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை ஞாபகம் இல்லை என அந்தக் கிழவி கூறினார் பள்ளி விடுதிக்கு மோர் மோர் கொண்டு வந்து கொடுப்பாயே அப்போது ஒருவனைப் பார்த்து நீ என்ன கோசாவா என்று கேட்டியே ஞாபகம் இருக்கிறதா என்றான் அப்போது அந்த கிழவி செய்வதறியாமல் மன்னித்து விடுங்கள் எசமான் என்றார்.

இந்தக் கதையின் சாராம்சம் மாணவர்கள் எப்பொழுதும் தங்கள் இலக்காக கல்வியை முதன்மையாகக் கொண்டு படித்தால் ஒரு எளிய மாணவனும் உச்சத்தை அடையலாம் என்பதை நினைவில் கொண்டு நீங்கள் பயிலும் கல்வியானது அறிவாக மாற வேண்டும். அந்த அறிவு சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவ்விழாவில் பல்கலைக்கழக தலைமை செயல் அதிகாரி முனைவர் வேங்கடா, பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கிறிஸ்டி, பதிவாளர் முனைவர் அப்துல் கனி கான், சிறப்பு அலுவலர் முனைவர் நித்தியானந்தம் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஸ்மித்தா எல்சா பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *