மண்ணச்சநல்லூரில் மண்ணை மகாலிங்கம் சிலம்பம் பெடரேசன் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாபெரும் கின்னஸ் சாதனைக்கான உலக சாதனை சிலம்ப நிகழ்வை புவனேஸ்வரி நகர் மைதானத்தில் நடத்தினர். இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தொடர்ந்து 45 நிமிடம் சிலம்பம் சுற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மண்ணை
க. மாரிமுத்து.