பெரம்பலூர் தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில். நவம்பர்-2025 மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார்துறை நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால் இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ளலாம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் தவறாது தங்களது கல்வித்தகுதி மற்றும் சுயவிவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள வாயிலாக பதிவு செய்யவேண்டும்.

வேலையளிப்பவர்கள் தங்களது நிறுவன விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார்த்துறை நிறுவனங்களும் வருகின்ற 21.11.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00-மணி முதல் 2.00 மணி வரை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04328-296352 மற்றும் 9499055913 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *