கரூர் செய்தியாளர் மரியான் பாபு

தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR குளறுபடிகளை எதிர்த்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதற்கு முன்பு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41பேருக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படது.
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கினை உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார் அதனை அடுத்து மீண்டும் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் துயர சம்பவம் நடைபெற்ற கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கடந்த 50 நாட்களாக எந்த பொது நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. குறிப்பாக அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஜாமீனில் விடுதலையான பிறகும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்த நிலையில்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விஜய் அறிவித்தார். இதனையடுத்து கரூர் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட செயலாளர் மதியழகன் கரூர் நகர காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தார்.
அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தவெக சார்பில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR குளறுபடிகளை எதிர்த்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தவெக சார்பில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எஸ்.ஜ.ஆர் எதிராக கையில் பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பினர் முன்னதாக உயிரிழந்த 41 பேருக்கும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வார்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.