ஆனைமலை சமணக்குடைவரை வரலாற்றுச் சின்னம்-திருச்சி வரலாற்று குழுவினரின்
ஓர் பார்வை! ஓர் பயணம்!!

திருச்சிராப்பள்ளி வரலாற்று குழுவினர் மதுரை ஆனைமலை சமணக்குடைவரை
வரலாற்றுச் சின்னம் ஓர் பார்வை! ஓர் பயணம் மேற்கொண்டனர். வரலாற்று குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார்,சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆனைமலை சமணக்குடைவரை
அமைவிடம் சென்று பார்வையிட்டு பேசுகையில், மதுரை ஆனைமலையில் உள்ள குகை தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு உள்ள கல்வெட்டில், “இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்” என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. குன்றம் என்றால் மலை. இதில் “இவ குன்றம்” என்றால் ஆனைமலை என்று பொருள்படுகிறது. பா என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் “தங்குவதற்கான கற்படுக்கை” என பொருள்படுகிறது. ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்டக்காயிபன் என்று சொல்லக்கூடிய இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது. ஆனைமலையில் அமைந்துள்ள சமணர்கள் வாழ்ந்த குகையின் நெற்றிப்பகுதியில் 9 புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சமணதீர்தங்கரர் மகாவீரர், பார்தவநாதர், பாகுபலி, இயக்கி அம்பிகா, தாமரை மலர்கள் ஆகிய சிற்பங்கள் இன்றும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

இங்கு உள்ள கல்வெட்டில், “இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்” என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. குன்றம் என்றால் மலை. இதில் “இவ குன்றம்” என்றால் ஆனைமலை என்று பொருள்படுகிறது. பா என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் “தங்குவதற்கான கற்படுக்கை” என பொருள்படுகிறது. ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்டக்காயிபன் என்று சொல்லக்கூடிய இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது.

ஆனைமலையில் அமைந்துள்ள சமணர்கள் வாழ்ந்த குகையின் நெற்றிப்பகுதியில் 9 புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சமணதீர்தங்கரர் மகாவீரர், பார்தவநாதர், பாகுபலி, இயக்கி அம்பிகா, தாமரை மலர்கள் ஆகிய சிற்பங்கள் இன்றும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. மலையின் நடுப்பகுதியில் இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் சமணர் படுக்கையும் வட்டெழுத்து, கிரந்தம், தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்குள்ள புடைப்புச் சிற்பங்களில் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா, இயக்கி ஆகியோர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

இச்சிற்பங்களும் சமணர்பள்ளியும் அச்சணந்தி என்ற சமணத் துறவியின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் மீது சுதை பூசி வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. தீர்த்தங்கரரின் அருகில் கைவேலைப்பாடமைந்த ஒரு குத்து விளக்கும், இருமருங்கும் தாமரைகளும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை பாண்டியர் காலத்தில் சமணர் இருக்கைகள் அனைத்தும் ஓவிய வல்லுநர்கள் பணிபுரிந்திருப்பார்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது.

இங்குள்ள ஓவியங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. சைவ வைணவ சமயங்களின் எழுச்சிக்குப் பின் அச்சணந்தி என்ற சமணத்துறவி தமிழகம் முழுவதும் கால்நடையாகவே நடந்து சமணப் பள்ளிகளை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது என்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *