சோழவந்தான்,
மதுரை செல்லம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் ஊராட்சியில் உள்ள கல்புளிச்சான்பட்டியில் கிராமத்தில் மந்தையம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டும், தணித்துரை,ஆண்டனிபிரகாஷ் நினைவாகவும் இரண்டாம் ஆண்டு கிடாய் சண்டை போட்டி உயர்நீதி மன்ற வழிகாட்டுதல் படி நடைபெற்றது போட்டியில் கலந்து கொள்ள ,ஆட்டு கிடாய்களை வயது உடல் எடை, .பல் வரிசை அடிப்படையில் ஆறு விதமாக பிரிக்கபட்டு கிடாய்முட்டு சண்டை போட்டியில் கலந்து கொள்ள அனுமதியளித்தனர்.

இப்போட்டிகளில் மதுரை , திருச்சி தேனி,திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிருந்து 120.ஜோடி கிடாய்கள்பங்கேற்றது. ,போட்டியில் வெற்றி பெற்ற ஆட்டு கிடாய்களுக்கு பித்தளை அண்டா வழங்கி,பரிசு வழங்கினர் ,இதில் முன்னாள் எம்.எல்.எ.கதிரவன். செல்லம்ட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமன் யூனியன் சேர்மன் கவிதாராஜா.துணை சேர்மன் மணிகண்டன்.மாவட்ட கவுன்சிலர்ரெட்காசி.
ஆனந்தன்.மற்றும், ஆயிரத்திற்கும் மேற்பட்ர்வைட. பார்வையா ளர்களாக கலந்து கொண்டு,போட்டியை கண்டு ரசித்தனர்.

இந்,நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்புளிச்சான்பட்டி கிடாய் முட்டு சண்டை போட்டி விழா கமிட்டி ,தலைவர் வீரசிங்கம்,முத்துபாண்டி,
குண்டுராஜா,கடவுள்,மூர்த்தி,கேப்டன்ராஜ்,பவித்ரன்,விஜயன் என இருபதுக்கும் மேற்பட்ட கமிட்டி உறுப்பினர்கள் குழு செய்து இருந்தனர்,
,முன்னதாக ஆட்டு கிடாய்களை கால்நடை மருத்துவர் கீர்த்தனா குழுவினர் பரிசோதனை செய்தார்., பாதுகாப்பு ஏற்பாடுகளை உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையில் செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் சிவசக்தி உடன் இருபத்தி ஐந்து மேற்பட்டபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *