தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தேனி எம்பி ஆய்வு
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் SIR முகாம்கள் பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் அனைத்து வார்டுகளிலும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆய்வு செய்து வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தார்
இந்த முகாமில் போடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் நேரு பாண்டியன் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி. ஐய்யப்பன் பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் மற்றும் வார்டு செயலாளர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்