தஞ்சையில் நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர் கலைமாமணி கவிஞர் வீரசங்கர் அவர்களின் “நாட்டுப்புறப்பாட்டுக்களஞ்சியம் ” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை .சந்திரசேகரன் புலவர் முத்துவாவாசி, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.மாநகர மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் .
நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல்துறை தலைவர் முனைவர் இரா.காமராசு, கரூர் பேராசிரியர் ராஜசேகரதங்கமணி, முனைவர் சண்முக.செல்வகணபதி, வல்லம் கவிஞர் தாஜ்பால், எழுத்தாளர் கேசவமூர்த்தி, மூத்தோர் பேரவைத்தலைவர் ஆதி. நெடுஞ்செழியன், கருங்குயில் கணேஷ், வளப்பக்குடி எஸ்.பரமசிவம், கலைமாமணி ஆக்காட்டி ஆறுமுகம், கலைமாமணி டி.ஜெ.சுப்ரமணியம், புதுகை கோ.மாரியம்மாள்,லெட்சுமி சந்துரு, அறநிலையத்துறை துரை.கோவிந்தராஜு, திருவலஞ்சுழி குருசாமி, கந்தர்வகோட்டை முருகையா, காணை.சத்யராஜ், நாணல் வேல்முத்து, புலியூர் பாலு, நேமம் பெல்லோராபெனடிக், வல்லம் செல்வி, ஆரூர் அம்பிகா ,லயன் பி.வீரையன்,பொன்னை சின்னதுரை மற்றும் நாடக கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தமிழரசி பதிப்பக உரிமையாளர் முனைவர் செந்தில்குமார் ,மற்றும் முனைவர் உஷா செந்தில்குமார் சிறப்பாக செய்திருந்தார்கள்.