மதுரையில் சிவன் கோயில்களில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, கம் பத்தடி மண்டபம் அருகே 1,008 சங்குகள் பரப்பப் பட்டு, புனித நீர் ஊற்றி சிறப்பு வழி பாடுகள் நடைபெற்றன. பின்னர், மூலவரான சொக்கநாதர் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதே போன்று , அம்மன் சந்னதி முன் 108 சங்குகள் வைக்கப்பட்டு, புனித நீர் ஊற்றி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், மூலவரான மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப் பட்டது. இதையொட்டி, திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.