கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி  அருகே உள்ள மோளகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.இதில் அவர் குடும்பத்துடன் இருந்து விவசாயம் செய்து வருகிறார்.இந்த நிலையில் அவரது நிலத்தை சுற்றியும் உள்ள காலி நிலங்களை பொன்னுச்சாமி,சாந்திநாதன்,சரவணன்,துரைசாமி பாலசுப்பிரமணியம் ஆகியோர் விலைக்கு வாங்கி அதை வீட்டு மனை இடங்களாக பிரித்து விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நிலத்தை அளவிடு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்த நிலையில் நில அளவையாளர்,வட்டாட்சியர் அலுவலகம் அலுவலர்கள் நிலத்தை அளவிடு செய்யாமல் எதிர் தரப்பினரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தாமதம் செய்து வருவதாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் போதிய பாதுகாப்பு வசதி கொடுக்கவில்லை என்றும் நில அளவையாளர் நிலத்தை வந்து அளக்க மறுப்பு தெரிவித்ததாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அது மட்டும் இல்லாமல் அரசு பணியில் இல்லாத ஒருவரை அரசு அதிகாரிகள் அலுவலகத்தில் பணி புரிந்து பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டுகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *