உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள "தி ஐ ஃபவுண்டேஷன்" கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. நிகழ்ச்சியை மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர்
சின்ன காமணன் மற்றும் கண் மருத்துவ நிபுணர் வம்சி துவங்கி வைத்தனர்.
இந்த மனித சங்கிலியில் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர்கள்,மருத்துவ மாணவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நின்றனர்.அப்பொழுது பத்திரிகையாளர்களை சந்தித்த மருத்துவர் வம்சி
கூறும்பொழுதுஇந்தியாவில் 10 சதவீதம் சர்க்கரை நோயாளிகள் இருப்பதாகவும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் 30 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதிகளவில் உடல் பருமன் இருப்பதால் சர்க்கரை நோய் உண்டாகும் எனவும் பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.சர்க்கரை நோயால் கண் பாதிப்பு ஏற்படும் எனவும் அதனை கண்டறிந்து உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.