கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் மற்றும்
மருதம் கல்வி அறக்கட்டளை,ஆகிய சார்பாக தேசிய நூலக வாரத்தை முன்னிட்டு நேஷனல் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்க விழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக முனைவர் கணேசமூர்த்தி வரவேற்றார்.இந்த விழாவுக்கு முனைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.
கல்வி பணியில் சிறந்து விளங்கும் இணைப்பேராசிரியர் கவுரவிக்கும் நோக்கில் “தகைசால் பேராசிரியர் விருது”வழங்கப்பட்டன.விருது பெற்ற சிறப்பு விருந்தினர் தஞ்சாவூர்,தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, இணைப்பேராசிரியர் முனைவர் இரா.இந்து பங்கேற்று நூல் வெளியிட்டார்.” அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் நூலகங்களில் புத்தகங்களை பாதுகாப்பாக சேமிக்கும் கோலன் தொகுப்பு முறையை உருவாக்கியவர்.இந்திய நூலக அறிவியல் ஆவணக்காப்பக மற்றும் தகவல் அறிவியலின் தந்தை என்று போற்றப்படுகிறார். மேலும் மாணவ மாணவிகள்
புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிக படுத்த வேண்டும்.புத்தகங்கள் படிப்பதன் மூலம் ஞாபகசக்தி திறன் அதிகரிக்கும். அறிவை அதிகப்படுத்திக்கூடிய புத்தகங்கள் உள்ளது. இந்த அரிய புத்தகங்களை படிப்பதன் மூலம் பயன்பாட்டினை அதிகப்படுத்த முடியும் எனக் கூறினார்.
தொடர்ந்து நேஷனல் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி,முதல்வர் கவிதா நாராயணன் வாழ்த்துரையாற்றினார். இதில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்