மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்தவர் வெங்கடசுப்பு (56) இவரது மனைவி பத்மாவதி (54). இவர்கள் அலங்காநல்லூர் அருகே பாசிங்கபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர்.
தனது மனைவி பத்மாவதியுடன் டூவீலரில் மதுரையில் இருந்து சிக்கந்தர் சாவடி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே பாய்ந்த
நாய் மீது டூவீலர் மோதியது. இத னால் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அந்த வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து அதலை நோக்கி வந்த அரசு பஸ்வெங்கடசுப்பு தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மனைவி பத்மா பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் அங்கு வந்து வெங்கடசுப்பு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலத்த காயங்க ளுடன் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த மனைவி பத்மாவதியை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையின் குறுக்கே வந்து விபத்தை ஏற்படுத்திய நாயும் உயிரிழந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *