திருவாரூர், நவம்பர்.18

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேச வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகம் முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாயிகள் மன்ற தலைவர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

அப்போது நாடு முழுவதும் 23 லட்சம் ஹெக்டேரில் பதிவு பெற்ற இயற்கை விவசாயிகள் சான்று பெறாத 5 லட்சம் இயற்கை விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம் இதனால் வரையிலும் மத்திய அரசு உற்பத்தி மானியம் விவசாயிகளுக்கு வழங்கவில்லை இதனால் இயற்கை விவசாயத்தில் இருந்து செயற்கை விவசாயத்திற்கு மாறும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டு வருவதாகவும் அதேபோல் பிரதமர் விவசாயிகளுடைய தானியங்களுக்கு இரண்டு மடங்கு விலை தருவதாக கூறினார்

இது நாள் வரையிலும் எந்த ஒரு தானியங்களுக்கும் இரண்டு மடங்கு விலையை கிடைக்கவில்லை இடுபொருளுக்கு மூன்று மடங்கு விலையை உயர்த்தி உள்ளதாகவும் நாடு முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி தள்ளுபடி செய்துள்ள பிரதமர் விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 12 ஆண்டுகளாக விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவில்லை இது பாரதப் பிரதமரின் கொள்கை முடிவா இந்த முடிவை பிரதமர் மாற்றிக்கொள்ள வேண்டும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தினை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளீர்கள்

விவசாயிகளுக்கு உரிய முறையில் பயிர் காப்பீட்டு தொகையை வழங்க இதுவரையிலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வரவில்லை இதனால் இயற்கை பேரிடர் காலத்தில் மிகுந்த பொருளாதார இழப்புக்கு உள்ளாகி வருகிறோம் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு எடுத்து நடத்த வேண்டும் இயற்கை விவசாயம் மாநாட்டிற்கு வருகை தரும் பிரதமர் இயற்கை விவசாயிகளை பிரதமர் வாழ வைப்பார் என்று நம்பிக்கை உள்ளது தமிழகத்திற்கு பேரிடர் காலத்தில் வழங்க வேண்டிய நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *