கன்சாலிடேடெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புதிய தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முன்னெடுப்புத் திட்டத்தில், கோவை நாயக்கன் பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் “கம்யூட்டர் மையம்” நிறுவியுள்ளது.

இந்த அரசு பள்ளியின் 500 மாணவர்களுக்கு உதவும் வகையில் 15 லட்சம் ரூபாய் செலவில் நவீன கம்ப்யூட்டர்கள், தடையில்லா மின்சார சாதனம் மற்றும் கம்ப்யூட்டர் மையத்திற்கான அடிப்படை வசதிகள் டேபிள், சேர் என அனைத்தும் வழங்கப் பட்டுள்ளது. மாறிவரும் காலத்திற்கேற்ப மாணவர்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளோடு கல்வி பயின்று, மாணவர்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க இது உதவும்.

விழாவில், பிரிகால் நிறுவனத் தலைவர் திருமதி. வனிதா மோகன். தலைமை விருந்தினராக சிறப்பித்து கம்ப்யூட்டர் மையத்தினை திறந்து வைத்து வாழ்த்திப் பேசும்போது “மாணவர்கள் கம்ப்யூட்டர் மையத்தினை நன்றாக பயன் படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். தொலை நோக்குப் பார்வையில், நாட்டின் வளர்ச்சிக்கு இத்தைய முயற்சிகள் மிகவும் அவசியமானவை. மாறிவரும் கல்விச்சூழலில் எதிர்கால நன்மை கருதி இது போன்ற முன்னெடுப்புகளில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டு வரும் ராகேஷ் பாராட்டுகிறேன்.”, என்றார். அவர்களை மனமார்

கன்சாலிடேடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ராமானந்த் பேசுகையில், ‘சமூகநலனுக்காக, இது போன்ற நவீன கட்டமைப்பு வசதி உதவிகள் வெறும் பொறுப்பு சார்ந்தது மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெறக்கிடைத்த நல்ல வாய்ப்புமாகும். அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் உள்ள எல்லோருமே, சமூகவளர்ச்சியில் பங்கேற்க வேண்டும். இந்த கூட்டுமுயற்சிகள். எதிர்கால சந்ததியினருக்கு பிரகாசமான வளர்ச்சியை உத்திரவாதப் படுத்தும்.

நவீன தொழில்நுட்பத்துடன், கற்கும் சூழல் வசதி மேம்பாடு மாணவர்களை உற்சாகப்படுத்துவதுடன், நம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இது மிகவும் பங்களிக்கிறது. இது போன்ற தனியார் நிறுவன சமூக பொறுப்பு நடவடிக்கைகள் (CSR Activities). சமூக வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

இந்த அரசு மேனிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முதல் கட்டமாக 100 க்கும் மேற்பட்டோர் பயனடையும் வகையில் கம்ப்யூட்டர் மையம் துவக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் காலத்தில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுடன் கலந்து பேசி, பிற அவசியத் தேவையையும் பூர்த்திசெய்து வழங்கவுள்ளோம்” என்றார்.

நாயக்கன்பாளையம் கிராமத்து அரசு மேனிலைப் பள்ளியில், கம்ப்யூட்டர் மையம். தடையில்லா மின்சார சாதனம், மேஜை, இருக்கைகள். மேலும் அடிப்படைத் தேவைச் சாதனங்கள் அனைத்தும் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ராஜேந்திரன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கன்சாலிடேடெட் நிறுவனம் குறித்து இந்திய சில்லறை விற்பனைச் சந்தையில் பல முன்னனி பிராண்டுகளில் ஒன்றாக இந்நிறுவனம் உள்ளது. “ஐ பிளானட் பிராண்டு மூலம் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனைசெய்து வருகிறது. மேலும் சோனி, எல்.ஜி, லினன் கிளப், தனிஷ்க் வழங்கும் மியா நகைக்கடைகளையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது. தென்னிந்திய நகரங்களில் மட்டும் 70க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது. இத்துடன் உடல் மற்றும் உணவு ஆரோக்கிய மையங்களான கல்ட் பிட், ஈட் பிட், கேக் ஸோன் நிறுவனங்களின் மையங்களையும் நடத்தி வருகிறது. வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியே தங்களின் நோக்கமாக செயல்படுவது, கன்சாலிடேடெட் நிறுவனத்தின் தாரக மந்திரம்,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *