ராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் கலந்தாய்வுகூட்டம் நடைபெற்றது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைத்தின் சார்பாக சிறுபான்மையினர் கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண்,சே.ச தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் .சிம்ரன்ஜீத் சிங்காலோன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் ராமநாதபுரம் பாராளமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி மற்றும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் நாகூர் அ.ஹ.நஜிமுதீன் , பிரவீன் குமார் டாட்டியா ராஜேந்திர பிரசாத் ஜெ.முகமது ரஃபி , சு.வசந்த் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . G.சந்தீஷ். மாவட்ட வருவாய்அலுவலர் . வ.சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.