உலகின் முன்னணி ஏர் கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றான ELGi (BSE: 522074 NSE: ELGIEQUIP), அதன் ஆயில்-ஃப்ரீ, ஆயில்-லூப்ரிகேட்டடு கம்ப்ரசர்-கள் மற்றும், குறைந்த லைஃப் சைக்கிள் செலவிலான கம்ப்ரஸ்டு ஏர் சொல்யூசன்-களுக்கான ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றின் போர்ட்ஃபோலியோ-வை இன்று ஹானோவர் மெஸ்-ஸில் வெளியிட்டது. ஹால் 4-இல், உள்ள எல்ஜி ஸ்டாண்ட் D31-இல் அமைக்கப்பட்ட கண்காட்சியில், எல்ஜி யின் ஒரு ஒருங்கிணைந்த வெப்ப மீட்பு அமைப்புடன் கூடிய ஆயில்-ஃப்ரீ ஸ்க்ரூ ஏர் கம்ப்ரஸர், மற்றும் ஒரு புதிய நிரந்தர மேக்னட் சிங்க்ரனஸ் மோட்டார்-உடன் கூடிய மேம்படுத்தப்பட்ட செயல்திறன் கொண்ட ஆயில்-லூப்ரிகேட்டடு ஸ்க்ரூ கம்ப்ரசர் ஆகியவை உள்ளன. மேலும், தொழில்துறையில் முன்னோடியான குறைந்த மொத்த உடைமைத் தொகை மற்றும் அதிகரித்த நம்பகத்தன்மையை இயலச் செய்யும் எல்ஜி யின் முதலாவதான டூ-ஸ்டேஜ் ஆயில்-லூப்ரிகேட்டடு ஸ்க்ரூ ஏர் கம்ப்ரசர்-ஆனது இக்கண்காட்சியில் பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ளது.

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் கூறுகையில்,
ஹானோவர் மெஸ்ஸி-இல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள எங்கள் போர்ட்ஃபோலியோ-ஆனது, ஆற்றல் சிக்கனத்தில் ஒரு படிமுறை மாற்றத்திற்கான வாடிக்கையாளர்களின் தேவைகளுக்குச் செவிசாய்ப்பதில் முன்னணிப் பாத்திரத்தை வகிக்கும் எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நிலைத்தன்மை மற்றும் நிகர பூஜ்ஜிய செயல்பாடுகளை நோக்கியப் பயணத்தில், குறைந்த ஆற்றல் நுகர்வு முதல் முழுமையான லைஃப் சைக்கிள் செலவு மதிப்பீடுகள் வரையிலான வாடிக்கையாளர் தேவைகள் வளர்ந்து வருகின்றன. ஏர் கம்ப்ரசர்கள்-ஆனது, ஐரோப்பாவின் ஒட்டுமொத்த தொழில்துறை மின் ஆற்றல் தேவையில் தோராயமாக 10%-ஐ நுகரும் அதே வேளையில், ஒரு கம்ப்ரசர்-இன் லைஃப் சைக்கிள் செலவில் 70% க்கும் அதிகமானவை செயல்பாட்டின் போது பயன்படுத்தப்படும் ஆற்றலால் ஏற்படுகிறது.

மேலும் அவர் கூறுகையில் “60 ஆண்டுகளுக்கும் மேலாக, இவ்வகையின் முன்னணி ஆற்றல் சிக்கன, செயல்முறை மேம்பாடுகள், புதிய தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகள் ஆகியவற்றுடன் மொத்த உடைமைத் தொகையைக் குறைப்பதற்குப் பங்களிக்கும் கம்ப்ரசர் ஏர் சொல்யூசன்-களை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மேலும், எங்கள் கம்ப்ரஸ்டு ஏர் நிபுணர்கள், ஒவ்வொரு முடிவு மற்றும் செயல்பாட்டின் மையத்தில் வாடிக்கையாளர்களை முன்னிறுத்தி, அவர்களின் ELGi கம்ப்ரஸர்-களின் வாழ்நாள் முழுவதும், #alwaysbetter எனும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை உறுதி செய்கிறது.” என்றார்.

எல்ஜி கம்ப்ரசர்ஸ் யூரோப்-இன், தலைவர் க்ரிஸ் ரிங்ஸ்டெட்டர் கருத்துத் தெரிவிக்கையில், “எங்கள் ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் ஆற்றல் செலவுகள், ஒழுங்குமுறை மற்றும் குறைந்த உமிழ்வுகளுக்கான மதிப்புச் சங்கிலி கோரிக்கைகள், மற்றும் செயல்பாட்டுச் செலவுகளை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான தேவை, அதிமுக்கியமாக ஆற்றல் சிக்கனம் ஆகியவற்றில் இடையறாத அதிகரிப்பை எதிர்கொள்வதால், அவர்களுடன் கூட்டுசேர்வதற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இன்று, ELGi-இன் கம்ப்ரஸ்டு ஏர் சொல்யூசன்-கள் பல்வேறு தொழில்துறை வெர்டிகல்ஸ் முழுவதும் எங்கள் ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு இவ்வகையின் முன்னணி ஆற்றல் சிக்கனத்தை வழங்குகின்றன. எங்கள் சகாக்கள் மற்றும் சேனல் கூட்டாளர்கள், அவர்களின் நிபுணத்துவம், அனுபவம் மற்றும் விநியோகம் மூலம், எங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களின் உற்பத்திச் செயல்பாடுகளில் முழுமையான மன அமைதி பெறுகின்றனர் என்பதை உறுதிப்படுத்துகின்றனர். குறிப்பிடத்தக்க செயல்முறை மேம்பாடுகளானது, தயாரிப்புகளின் மேம்பட்ட நம்பகத்தன்மை மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொழில்துறையில் முன்னோடியான கஸ்டமர் வாரண்டீஸ் ஆகியவற்றில் பலனளித்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் IoT ஆகியவற்றில் எங்களின் இடைவிடாத கவனம், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கம்ப்ரஸ்டு ஏர் சிஸ்டம்-களுக்கு வழிவகுத்தது. இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உடைமைப் பலன்களின் டேஞ்சிபில் விலையுடன் வழங்குகிறது. நாங்கள் இப்போதுதான் தொடங்குகிறோம், எப்படி!”

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ELGi-இன் முன்னோடித் தயாரிப்புகள் மற்றும் கம்ப்ரஸ்டு ஏர் சொல்யூசன்-கள் ஆகியவை 120+ நாடுகளில் உற்பத்தி, ஃபுட் & பிவரேஜ், கட்டுமானம், மருந்துத் தயாரிப்பு மற்றும் ஜவுளி வரையிலான தொழில்துறைகளில் பல்வேறு பயன்பாடுகளுக்கு சேவை செய்துள்ளன. 400+ தயாரிப்புகளுடனான ஒரு வலிமையான போர்ட்ஃபோலியோ-வை திறனேற்றும் விதமாக, மூன்று கண்டங்களில் பரவியுள்ள ELGi-இன் அதிநவீன உலகளாவிய உற்பத்தி வசதிகள், கார்பன் சமநிலை, நீர் சிக்கனம் மற்றும் வட்டக் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் உறுதியாக உள்ளன. என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *