மன்னார்குடி,
தேசிய மருந்தியல் வார விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
64 வது ஆண்டாக இன்று தேசிய மருந்தியல் வார விழா மன்னார்குடியில் நடைபெற்றது. தனியார் மருந்தியல் கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர் மன்னார்குடி தேரடியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
மருந்தாளுனர்களின் முக்கியத்துவம் தடுப்பூசிகளின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.