மன்னார்குடி,
ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது இது ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் திருவாரூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் சுகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியில் மாவட்ட பொருளாளர் முருகையன் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பிரகாஷ் மற்றும் அரசு ஊழியர்கள் கல்லூரி பேராசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் ஆசிரியர்களின் நலனுக்கு எதிரான அரசாண எண் 243 ரத்து செய்ய வேண்டும் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அரசு துறைகளில் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை உறுப்பினர்.