மன்னார்குடி,

திருவாரூர் அமுமுக ஒன்றிய செயலாளர் குரும்பேரி மணிகண்டன் என்கிற திருமாறன் தலைமையில் இன்று அவரது ஆதரவாளர்களான ஒன்றிய கழக அவைத்தலைவர் இராஜமாணிக்கம் , மகளிர் அணி துணை செயலாளர் சாந்தி உள்ளிட்ட சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த அமமுகாவினர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் புரட்சி தலைவர் எம்ஜி.ஆர். கையில் பச்சை குத்திக் கொள்ள சொன்னபோது அந்த காலத்தில் இருந்து அதிமுகவில் சின்ன சின்ன பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது .
அதிமுக மிக பெரிய மாபெரும் இயக்கம் அதில் சிறிய பிளவுகள் இருக்கும் எப்படி இருந்தாலும் காலம் காலமாக 1972-ல் இருந்து 52 ஆண்டுகாலமாக மீண்டும் ஒன்றாக இணைவது என்பது நடந்து கொண்டிருக்கிறது . அந்த வகையில் அமமுகவில் இருந்து மீண்டும் சரியான சந்தர்ப்பத்தில் இணைந்து இருப்பது வரவேற்க வேண்டிய காலம் நமது காலம் 2026 –ல் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க போகிறது என்றார் .