வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 108- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர், இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தியின் 108- வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார், நிகழ்ச்சியில் அன்னை இந்திராவின் சாதனைகளையும், நாட்டுக்காக தொண்டாற்றியதையும் விளக்கி காங்கிரஸ் தொழிற்சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் வலஙகை குலாம் மைதீன் மாணவர்கள் இடையே நினைவு கூர்ந்தார், டைலர் நாகராஜன் வந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருள், உபகரணங்களை வழங்கினார். நிகழ்வில் பள்ளிமாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.