கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற நல அமைப்பு ரேவா சங்கத்தினர் சார்பாக மாதாந்திர கூட்டம் உறுப்பினர் முருகானந்தம் அரங்கில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சங்க தலைவர் நாதன், செயலாளர் பிரேம் குமார்,பொருளாளர் கருணாநிதி மற்றும் துணை நிர்வாகிகள் அனைவரும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் அதை துரிதபடுத்துவது பற்றியும் உரிய ஆலோசனைகளை வழங்கினர் மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் ஓய்வு ஊழியர் தினம் சென்னையில் கடைப்பிடிப்பதால் வால்பாறையில் இருந்து அதிக அளவில் உறுப்பினர்கள் சென்னைக்கு சென்று கலந்து கொள்வது என்றும் ரேவா சங்கத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது கூட்ட முடிவில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் சி. சின்னப்பன் 6676 நன்றியுரை கூறினார் முடித்து வைத்தார் இந்த கூட்ட ஏற்ப்பாடு களை வால்பாறை செயலாளர் ரேவா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்